அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 ஆவது வருட நினைவேந்தல் திராய்க்கேணி எழுச்சி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் நேற்று(06) மாலை இடம்பெற்றபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது அதுவும் தோண்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


