நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அரைவாசி சம்பளத்தை வழங்கவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய பல கொடுப்பனவுகளை வழங்காமல் இருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ், அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளை இடைநீக்கம் செய்ய நீதிச் சேவை ஆணைக்குழு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, அந்த நீதிபதிகளுக்கு பாதி சம்பளமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிச் சேவை ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இதேவேளை, தொலைபேசிக் கொடுப்பனவுகள், வாகனக் கொடுப்பனவுகள், ஓட்டுநர் கொடுப்பனவுகள், புத்தகக் கொடுப்பனவுகள், வீட்டு வாடகைக் கொடுப்பனவுகள், மேல்முறையீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

