இந்தியத் தமிழ்த் திரைப்படமான ரெட்ரோ சூர்யா நடித்த 44 ஆவது திரைப்படமாகும். இப்படம் கடந்த 01 ஆம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளதுடன் இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் இரண்டு நாட்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்கில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக நிரம்பியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருந்தாலும் கூட முதல் நாள் உலகளவில் ரூ. 28 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.
அதன்படி, ரெட்ரோ படம் முதல் நாள் இலங்கையில் மட்டுமே ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி ரூ. 61 லட்சம் வசூல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

