டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை என்ற 3 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 22 மாவட்டங்களின் பெயர்கள் அடங்கிய குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளயாகியுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில், 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி || இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 நவம்பரில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளின் விளைவாக மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என பின்வரும் நிர்வாக மாவட்டங்களை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
1. கண்டி நிர்வாக மாவட்டம்
2. நுவரெலியா நிர்வாக மாவட்டம்
3. பதுளை நிர்வாக மாவட்டம்
4. குருநாகல் நிர்வாக மாவட்டம்
5. மாத்தளை நிர்வாக மாவட்டம்
6. கேகாலை நிர்வாக மாவட்டம்
7. கம்பஹா நிர்வாக மாவட்டம்
8. முல்லைத்தீவு நிர்வாக மாவட்டம்
9. அனுராதபுரம் நிர்வாக மாவட்டம்
10. கொழும்பு நிர்வாக மாவட்டம்
11. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டம்
12. பொலன்னறுவை நிர்வாக மாவட்டம்
13. மன்னார் நிர்வாக மாவட்டம்
14. புத்தளம் நிர்வாக மாவட்டம்14. புத்தளம் நிர்வாக மாவட்டம்
15. இரத்தினபுரி நிர்வாக மாவட்டம்
16. மொனராகலை நிர்வாக மாவட்டம்
17. மட்டக்களப்பு நிர்வாக மாவட்டம்
18 அம்பாறை நிர்வாக மாவட்டம்
19. திருகோணமலை நிர்வாக மாவட்டம்
20. கிளிநொச்சி நிர்வாக மாவட்டம்
21. வவுனியா நிர்வாக மாவட்டம்
22. களுத்துறை நிர்வாக மாவட்டம்

