இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன், இரு வார கால உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(24) இலங்கை வந்தடைந்தார்.
இன்று காலை 8.35 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈகே-650 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்தில் வைத்து அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

