மன்னார் துள்ளுக்குடியிருப்பு பகுதியில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட இருப்பதாக இதன் ஏற்பாட்டாளரும் சமூக சேவையாளருமான ஸ்ரீபன் செந்தி தெரிவித்துள்ளார்.
‘ஈகில் ஐ இன்டர்நெஷனல் நெட் வர்க் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார் துள்ளுக்குடியிருப்பு கிராம பகுதியில் 39 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்படுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வருகை தரும் வைத்தியர்களே இப்பரிசோதனையை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பரிசோதனையானது துள்ளுக்குடியிருப்பிலிருந்து கட்டுக்காரன் குடியிருப்பு வரைக்குமுள்ள பின்தங்கியுள்ள கிராம மக்களுக்காகவே இது மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட தொகையினருக்கே இச் சேவை நடைபெறுவதால் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.
அத்துடன் இக் கிராமங்களுக்கு அப்பாற்பட்டவர்களும் இப்பரிசோதனைக்கு உள்ளாக வேண்டுமானால் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டபின் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையானது துள்ளுக்குடியிருப்பு ஆலய வளாகத்தில் நாளை மறுதினம்(10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 0774974108 தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும்.

