87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்

87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரளா கஞ்சா பேசாலை பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருநூற்று பதினெட்டு கிலோகிராம், எண்ணூறு கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை அவதானித்து சோதனை செய்யப்பட்டது அங்கு, டிங்கி படகில், எட்டு பொதிகளில் பொதிச்செய்யப்பட்டிருந்த இருநூற்று பதினெட்டு கிலோகிராம், எண்ணூறு கிராம் கேரள கஞ்சாவுடன் டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

 

கடற்படையின் நடவடிக்கைகளால் டிங்கி படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் பேசாலை கடற்கரையில் டிங்கி படகுடன் கேரள கஞ்சாவினை கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றதோடு, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு எண்பத்தேழு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *