2027 ஒருநாள் உலகக் கிண்ணம்: போட்டி அட்டவணை அறிவிப்பு

2027 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் நடைபெறும் எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர், 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் நவம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

14 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரின் முதற்கட்டப் போட்டிகள், தலா 7 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களின் கீழ் நடைபெறும்.

இலங்கை B குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவில் பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அக்குழுவின் மற்றுமொரு அணி தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகவுள்ளது.

A குழுவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், மற்றுமொரு இடம் தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிக்கு உரிமையாகும்.

போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 17 ஆம் திகதி கேப் டவுனிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 18 ஆம் திகதி ஷ்வானேவிலும் (Tshwane) நடைபெறவுள்ளன.

2027 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 21 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *