மலையகத்தில் மழை தீவிரம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன், நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, ஹட்டன் – நுவரெலியா மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *