இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்:

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் கோபம் மற்றும் அலட்சியப் போக்கு மாறும். வேலையில் இருந்த பணிச்சுமை படிப்படியாகக் குறையும்.

 

ரிஷபம்:

இன்று குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புதிய இடம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். பதற்றத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

 

மிதுனம்:

இன்று சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டியிருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தம்பதியினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தந்தையுடனான மனக்கசப்புகள் நீங்கும்.

 

கடகம்:

இன்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சந்திக்க விரும்பிய நபரே உங்களைத் தேடி வந்து சந்திப்பார். சுபகாரியங்கள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறும்.

 

 

சிம்மம்:

இன்று எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கன்னி:

இன்று பேச்சில் கம்பீரம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உயர்ந்தவர்களின் நட்பால் கௌரவமும் மதிப்பும் உயரும்.

 

துலாம்:

இன்று வேலைப்பளுவால் உடல் சோர்வும் மனச்சோர்வும் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறு மனக்கசப்புகள் தோன்றி மறையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

 

விருச்சிகம்:

இன்று மன உளைச்சல் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தால் பகைமை ஏற்படக்கூடும்.

 

தனுசு:

இன்று வியாபாரத்தில் சுமுகமான லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். முன்கோபம் மற்றும் மன அழுத்தம் குறையும்.

 

மகரம்:

இன்று எடுத்துக்கொண்ட பணிகளைத் தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

 

கும்பம்:

இன்று கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற உறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தியளிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

 

மீனம்:

இன்று சிக்கனமாகச் செலவிட்டு சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *