நேபாளத்தில் 5.6 ரிக்டர் நிலநடுக்கம்!

சீன எல்லைக்கு அருகே கிழக்கு நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் இன்று காலை 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே சுமார் 300 கி.மீ.தொலைவில் உள்ள,தப்லேஜங் மாவட்டத்தில் உள்ள ஒலாங்சுங் கோலா பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்குவாசபா, இலாம்ப், பாஞ்ச்தர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உணரப்பட்டன.

மேலும், தலைநகர் காத்மாண்டு மற்றும் நாட்டின் மேற்கு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்தியாவில் டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பெஹார் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *