நேற்று(11) ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தலைமையில் பொதுக்கூட்டம் மன்னார் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் முறைப்பிரச்சனைகள் தொடர்பான ஒன்றுகூடலு நடைபெற்றது.
இதில் பதவி நிலை அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, அரச உத்தியோகத்தர் என்ற வகையில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் சமம் என்ற அடிப்படையில் இன்று அநுர அரசு சிறப்பாக செயற்படுகின்றது.
ஆகவே கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் நடைமுறைப்படுத்த வேண்டும். முறையற்ற இடமாற்றம் செய்ய கூடாது…! பதில் கடமை கொடுப்பனவுகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கவேண்டும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவம் அந்தஸ்து முறையாக கொடுக்கப்படவேண்டும். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பல தொழில் முறைப்பிரச்சனைகள் தீர்க்கப்படுவது தொடர்பாக தம்மிக்க, மார்க்ஸ்பிரபா, மன்னார் மாவட்ட ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பொதுச்செயலாளர் விக்டர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சிறப்பான ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
அதில் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அத்துடன் இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர் அ.ராயூகரன்


