மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சிப்பாயை முருங்கன் பொலிஸார் இன்று(18) காலை கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவி மடு பகுதியில் இருந்து அரச பேருந்தில் பாடசாலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் குறித்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் காவல்துறையினர் இராணுவச் சிப்பாயை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

