பிறைந்துறைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று(05) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபரி ஒருவரை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணியளவில் பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரியை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *