கிளிநொச்சியில் வயோதிபப் பெண் இனந்தெரியாத நபர்களினால் நேற்று(11) கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2 ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

