இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் – வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலீத் ஹமூத் அல்-காஹ்தானி, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்து, இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

 

இக்கலந்துரையாடலில், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் விரிவுபடுத்தல் குறித்தும் விஷேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *