உள்நாட்டு சந்தைகளில் வெற்றிலையின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சந்தைகளில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக வெற்றிலை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தரமான நிலையில் உள்ள வெற்றிலை 12 ரூபாய்க்கும், நடுத்தர வெற்றிலைகள் 10 ரூபாய்க்கும், சிறிய வெற்றிலைகள் 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், 40 வெற்றிலைகள் அடங்கிய ஒரு கைப்பிடி வெற்றிலை 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிலையின் விலை அதிகரிப்பை அடுத்து பாக்கு ஒன்று 8 ரூபாய் முதல் 10 ரூபாவுக்கு இடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், வெற்றிலை, பாக்கு அடங்கிய பொதி ஒன்று 70 ரூபாய் முதல் 80 ரூபாவுக்கு இடையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த விலை அதிகரிப்பதால் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெற்றிலை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *