கொட்டகலை வைத்தியசாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிகழ்வு

கொட்டகலை வைத்தியசாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிகழ்வானது கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், வர்த்தக சங்கத் தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம் பெற்றது.

 

கொட்டகலை வைத்தியசாலை தரப்பினர் நீண்ட காலமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

 

இதன் காரணமாக கடந்த வாரம் பிரதேச சபை உறுப்பினரும் வர்த்தக சங்கத் தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் தலைமையில் கொட்டகலை வைத்தியசாலைக்கு பொறுப்பான அத்தியட்சகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

 

அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதியளித்த பின்னர், வைத்தியசாலைக்கு தனது சொந்த நிதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *