யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளைக் கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சிக் கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி செய்து தருவதாக கூறிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து நேற்று(26) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இதனைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவருமான வேந்தன் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளைப் பார்வையிட்டதுடன் வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் கூறியதைத் தொடர்ந்து உடனடியாக புளூஸ் அறக்கட்டளை கனடாவின் உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் மண் பரவுவதற்காக ரூபா 60 000 கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு தற்போது தேவையான தேவைகள் தொடர்பாக அறிக்கை ஒன்று பெறப்பட்டு அதனைக் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறிச் சென்றார்.
இச் சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், பருத்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

