ஈரானை தொடர்ந்து ஈக்குவடோரில் ஆயுதக் குழுக்களை குறி வைத்து, ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரான் மீது, அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உயர் தலைவர் கொமெய்னி கொல்லப்பட்டார். தற்போது ஈக்குவடோரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குழுக்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ஈக்குவடோர் படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் எல்லை தாண்டி வரும் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக தான் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
”ஈக்குவடோரில் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஈக்குவடோர் மற்றும் அமெரிக்க படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. மக்கள் மீது வன்முறை மற்றும் ஊழலைத் திணித்து வரும் அமைப்பினரை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஈக்குவடோர் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியதற்காக நாங்கள் பாராட்டுகிறோம்” என அமெரிக்க இராணுவம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

