உலகம் முழுவதும் வெளியாகிய ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று உலக முழுவதும் திரையரங்குகளில் திருவிழா கோலமாக வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிகளைகாண ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் பெருமளவில் திரண்டுள்ளனர்.

கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், கேரளாவில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதால் திரையரங்குகளில் திருவிழா போன்ற சூழல் நிலவுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாகியுள்ளதுடன், வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை மற்றும் படத்தின் மாஸான திருப்பங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால், இப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *