நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடைய பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை பும்ரா முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் முன்னதாக, காயம் காரணமாக இந்த ஆண்டு சில டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன பும்ராவின் உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுப் பணிச்சுமையை இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவு எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நவம்பர் 19ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கியமான டெஸ்ட் தொடர்களையும் கருத்தில் கொண்டு அவரைத் தயார்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *