திபெத்தில் நாக்கு (Nagqu) நகருக்கு கிழக்கே உள்ள உயர்மலைப் பகுதியில்,நேற்றிரவு(22) ரிச்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிய அளவிலான பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் அதிர்வால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பலமாக அதிர்ந்து இடிந்து விழுந்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் பாதிப்பைத் தொடர்ந்து, அப்பகுதி வழியாகச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகம் 2ஆம் கட்ட அவசரகால மீட்பு நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்தியுள்ளது.

