இன்றைய ராசிபலன்!

மேஷம்: தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும். தடைப்பட்ட நிதி உதவிகள் கிடைப்பதுடன், நிலுவையில் இருந்த ஆர்டர்களும் கைகூடும். உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பளு குறையும். குடும்பப் பிரச்சினைகளும் படிப்படியாகத் தீரும்.

 

ரிஷபம்: புதிய வீடு வாங்கும் முயற்சிகள் முன்னேற்றமடையும். பழைய வீட்டைப் புதுப்பிக்கவும் வாய்ப்புகள் ஏற்படும். வாகனம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், குடும்ப நிகழ்வுகளிலும் பங்கேற்க நேரிடும்.

 

மிதுனம்: குடும்ப விவகாரங்களில் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மனக்குழப்பங்கள் நீங்கி, தைரியத்துடன் செயல்படுவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்த பலனைத் தரும்.

 

கடகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடலாம். தொழிலுக்கான முதலீட்டுப் பணமும் கிடைக்கக்கூடும்.

 

சிம்மம்: எதிர்ப்புகளைச் சமாளிப்பதில் கவனம் தேவை. துன்பங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைவதுடன், மனக்கவலைகளும் நீங்கி நிம்மதி ஏற்படும்.

 

கன்னி: வரவேண்டிய பணம் கிடைக்கும். பேச்சுத் திறனால் காரியங்களைச் சாதகமாக முடிப்பீர்கள். தொழில், வியாபார முயற்சிகள் வெற்றியளிக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். இருப்பினும் அலைச்சல் அதிகரிக்கலாம்.

 

துலாம்: புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தர்கள் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பார்கள். குடும்பக் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். தம்பதியினர் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

 

விருச்சிகம்: உறவினர்களின் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமையான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

தனுசு: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்படலாம். எதிர்ப்பவர்களிடம் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

 

மகரம்: பணத்தைச் செலவிடுவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நீண்டகாலமாகத் தாமதமான காரியங்கள் சாதகமாக முடியும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். தந்தை தொடர்பான செலவுகளும் வெளியூர்ப் பயணங்களும் ஏற்படலாம்.

 

கும்பம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் குறையலாம். எனினும் பணியைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

 

மீனம்: குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தோன்றி பின்னர் சீராகும். தம்பதியினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *