இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று (27) இடம்பெறுகின்றது.
லாஹூரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி 23.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 23.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளதுடன் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுள்ளது.
இலங்கை அணி ஒரு போட்டியில் இதுவரை வெற்றி பெற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்வதற்கு இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

