விமானத் தாக்குதலில் துணிச்சல் காட்டிய இந்தியப் பணியாளர்களுக்கு UAE கௌரவம்!

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விமானத்தின் விமானி அறைக்குள் இடம்பெற்ற தாக்குதலின்போது துணிச்சலுடன் செயற்பட்ட இந்திய விமானி கப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் flydubai விமானப் பணியாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது.

 

குறித்த சம்பவத்தின்போது பலத்த காயமடைந்த போதிலும், கப்டன் ஸ்மித் மச்சார் விமானி அறையின் கதவைத் திறக்க முடிந்தது. இதன் மூலம் விமானப் பணியாளர்களும் பயணிகளும் தலையிட்டு சம்பவத்தைக் கட்டுப்படுத்த உதவினர்.

 

அவர்களின் துணிச்சலான நடவடிக்கைகள் பெரும் அனர்த்தம் ஏற்படக்கூடிய நிலையைத் தவிர்க்க உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விமானப் பணியாளர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அவர்களுக்கு முதலாம் தர சயீத் விருதை வழங்கினார்.

 

இந்தக் கௌரவங்களை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கினார்.

 

கப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் அவருக்கு சிவிலியன் துணிச்சல் விருதொன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 

காயங்களிலிருந்து அவர் குணமடைந்த பின்னர் இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆபத்தான சூழ்நிலையில் விமானியும் பணியாளர்களும் வெளிப்படுத்திய துணிச்சல், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் தலையீடு ஆகியவை பெரும் அனர்த்தத்தைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதை இந்தக் கௌரவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *