காத்தான்குடியில் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கல்!

காத்தான்குடியில் மகளிர்  மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கும் விசேட நிகழ்வு  (28) காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மஃஜூத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வின் போது  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்  , கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டதுடன், வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *