மிரிஸ்ஸ கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட அயர்லாந்து சுற்றுலாப் பயணி!

மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 44 வயது அயர்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை பிற்பகல் கடல் அலையில் சிக்கி கடற்கரையிலிருந்து பல தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொட்டவில பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக செயற்பட்டு சுற்றுலாப் பயணியை மீட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அவருக்கு முதலுதவியும் அளித்துள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *