பதுளு ஓயாவில் குதித்த 21 வயது இளைஞர் மாயம்!

ஹாலி-எல, உடுவர 7ஆம் கட்டைப் பகுதியில் பதுளு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள அணைக்கட்டு பகுதியில் நீரில் குதித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளதுடன், நீரில் குதித்த இளைஞர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், காணாமல் போன இளைஞர் தியத்தலாவ, கஹகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *