ஏறாவூர் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி; இருவர் காயம்

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது வேகமாக வந்த லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சந்திவெளியைப் பிறப்பிடமாகவும், மன்னம்பிட்டி சொறிவிலவை வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா நித்தியானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *