அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.9% வீழ்ச்சி!

2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையின் ஊடாக இவ்விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கடந்த 20 ஆம் திகதியளவில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஆண்டின் ஆரம்பம் முதல் 6.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த நவம்பர் 13 ஆம் திகதி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையில், அன்றைய தினமளவில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி 6.8 சதவீதமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு வார காலப்பகுதியில் ஆண்டின் ஆரம்பம் முதல் கணக்கிடப்பட்ட ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி 0.1 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட பெறுமதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் மதிப்பிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *