எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் மத்தேயு டக்வொர்த் ஏற்பாடு செய்த கூட்டம் மற்றும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நிலையான அபிவிருத்தி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்திப் பங்காண்மையை மேம்படுத்துவதற்கான வழிகளும் ஆராயப்பட்டன.

