தாய்லாந்து எம்.பிக்கு சிறைத்தண்டனை!

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சித்தமைக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ருக்ஷனோக் ஸ்ரீநோர்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சமூக வலை தளத்தில் மன்னர் குடும்பத்தை அவதூறாக விமர்சித்து 2 பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பேங்கொங் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அதில், ஒரு பதிவிற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்தக் குற்றச்சாட்டை இரத்து செய்த நீதிமன்றம், மற்றொரு பதிவிற்கான தண்டனையை உறுதி செய்து சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்தது.

பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டதால், எம்.பி. பதவி தப்பியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சிப்பதற்கு எதிராக மிகக் கடுமையான சட்டம் அமுலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *