தெதுரு ஓயாவில் 6 வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் தலா ஒரு அடி உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், விநாடிக்கு 4,200 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர்வரத்தைச் சீராகக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவு மற்றும் நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர்வரத்தைப் பொறுத்து, திறக்கப்பட்டுள்ள வான் கதவுகளின் எண்ணிக்கை மேலும் மாற்றியமைக்கப்படலாம் என நீர்ப்பாசன நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் தெதுரு ஓயாவின் இரு கரைகளையும் அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றின் நீர்மட்டம் உயர்வது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *