ஹட்டன் பேருந்தில் பணப்பை திருட்டு!

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி கினிகத்தேனையில் பேருந்தில் ஏறிய சந்தேக நபர், பயணியின் சட்டைப் பையிலிருந்து பணப்பையைத் திருடியுள்ளார்.

அதிலிருந்த ரூ.18,000 பணத்தை எடுத்ததுடன், ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி ஹட்டன், டிக்கோயா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து சுமார் ரூ.3,000 பெறுமதியான பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.

பணப்பை திருடப்பட்டதை அறிந்த பயணி, பேருந்து நடத்துனரிடம் தெரிவித்ததுடன், பின்னர் கிடைத்த குறுஞ்செய்தி மூலம் தனது ஏ.டி.எம். அட்டை பயன்படுத்தப்பட்டதை அறிந்து அதனை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1117 அல்லது 051 222 2222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *