மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களைத் திருடிய புதூரைச் சேர்ந்த ஒருவரை இன்று(25) கைது செய்ததுடன் திருடப்பட்ட சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு சைக்கிளில் சென்று அதனை அங்கு நிறத்திவிட்டு வங்கிக்குள் சென்று வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைத்த சைக்கிள் காணாமல் போயுள்ளது.
இதனை அறிந்து கொண்ட சைக்கிள் உரிமையாளர் அந்த பகுதியில் தேடிய போது சைக்கிள் திருடியவர் சிசிரிவி கமராவில பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து சைக்கிளைத் திருடியவரை அடையாம் கண்டு கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து புதூரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடிய ஒரு சைக்கிளை 18 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும் அடுத்த சைக்கிளை 5 ஆயிரம் ரூபாவுக்கு ஈட்டுக்கடை ஒன்றில் ஈடு வைத்துள்ளமை தெரிய வந்தது.
இதனையடுத்து இரு சைக்கிள்களையும் மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.