வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி !

மந்திகை மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில்  மோட்டார் சைக்கிள்  மதிலுடன்  மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்ட நிலையில்  இன்றைய தினம் காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த  பிரபாகரன் பிரணவன் வயது (25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *