மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) இடம் பெற்றது.
இதன் போது மாவட்ட செயலகத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் 2026 ஆண்டு மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக பிரதம கணக்காய்வாளரினால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீதாந்த், , மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

