தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேர சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்ட தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று(04) மாலை சூட்சுமமான முறையில் பயணப்பொதியில் மறைத்து பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக புளியம்பொக்கனைப் பகுதியில் சந்தேக நபர்கள் பேருந்தில் கசிப்பினை கொண்டு செல்ல முற்பட்ட பொழுது கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடம் இருந்து 30 லீற்றர் கசிப்பினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் இன்றும்(05) தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பெரியகுளம் கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50 லீற்றர் கசிப்பு, 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


