இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

 

ரிஷபம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் அதிகரிக்கும்.

 

மிதுனம்:

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். கடன் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

 

கடகம்:

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணியாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

 

சிம்மம்:

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

 

கன்னி:

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

 

துலாம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

 

விருச்சிகம்:

சகோதர வகையில் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

 

தனுசு:

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.

 

மகரம்:

தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

 

கும்பம்:

இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அதனால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாகக் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

 

மீனம்:

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *