முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி வயலில் அறுவடை விழா

பலபோகங்களாக பயிர்ச்செய்கைக்கு உட்படாது காணப்பட்ட கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி வயலில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை செய்யப்பட்ட வயலின் அறுவடை விழா பாடசாலையின் அதிபர் பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த அறுவடை நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், புலிங்க தேவன் கமக்காரர் அமைப்பினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

வயல் நாற்று நடுகை முதல் அறுவடை வரை அனுசரனையை முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *