கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று(07) காலை கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை அதிகளவான துப்பாக்கி ரவைகள் சிதறிக் காணப்பட்டுள்ளது.
அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவம் சிதறிக் காணப்பட்ட ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


