சாப்பு சட்டத்தை மீறினால் இனி நடவடிக்கை; ஏறாவூர் நகர சபை தவிசாளர் எச்சரிக்கை

ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் சில வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுடைய நேரத்தில் எவ்வித ஒழுங்கமைப்பையும் பின்பற்றாது வியாபார நடவடிக்கைகளை சாதாரணமாக மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் தவிசாளர் அல்ஹாஜ் எம். எஸ். நழீம் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சகிதம் சலூன் மற்றும் சில உணவகங்களுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது வெள்ளிக்கிழமை வர்த்தக நிலையங்களை பூட்டுதல் எனும் பொதுவான சாப்பு சட்ட விதிகளைத் தாண்டி தொழுகைக்கு சற்று முன்னர் வரை எவ்வித சலனமும் இன்றி வாடிக்கையாளர்கள் குவிந்து நிற்க வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிகை அலங்கார நிலையங்கள் உணவகங்கள் இங்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

தொழுகையுடைய நேரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபார உரிமையாளர்களிடம் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ அதானுக்கு முன் மூடுமாறும் தொழுகை முடிவடைந்தவுடன் தங்களது வழமையான வியாபார நடவடிக்கையை தொடருமாறும் வேண்டிக் கொண்டார்.

அத்தோடு மேலும் தொடர்ச்சியாக ஜும்ஆ தொழுகையுடைய நேரத்தில் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் மேற்கொள்ளும் பட்சத்தில் சாப்புச் சட்டத்தின் பிரகாரம் வியாபார உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்களவிஜயத்தின் போது ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான ஏ.எம் அஸ்மி, எம்.ஆர் நஸீர், செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், வருமானப் பரிசோதகர்களான என். வாஹித் மற்றும் எம்.எஸ்.எம் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *