தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிராம சேவையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக தர்மபுரம் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் மூலம் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் ஒருவர் 12 வயதுடைய சிறுமி வழங்கிய வாக்குமூலத்துக்கமைவாக தன்னை 46 வயது உடைய ஒருவர் வன்புணர்வு செய்ததாக வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 20ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

