மன்னாரில் இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு தலைமையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி மன்னார் சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, நகர வீதிகளில் சென்று மீண்டும் போராட்டக் களமான மன்னார் சுற்றுவட்டத்தை அடைந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கனிய மணல் அகழ்விற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்வது மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள் வழங்காதிருத்தல் உள்ளிட்ட பல அடிப்படை கோரிக்கைகள் உள்ளடங்கிய, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஒரு மகஜரில், ஓகஸ்ட் 6, 7ஆம் திகதிகளில் ஏற்பாட்டுக் குழு மன்னார் மக்களிடம் கையெழுத்துக்களை சேகரித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மகஜரை மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் நிலம் மக்களின் உரிமை”, “மன்னார் மண்ணை பாதுகாப்போம்”, போன்ற கோசங்கள் எழுப்பப்பட்ட இந்த போராட்டம் இல்மனைட் கனிய மண் அழ்வுக்கு எதிரான மக்கள் எழுச்சி ‘கருநிலம்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *