கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ தீர்த்தோற்சவ திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது கடந்த ஆம்25 திகதி மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 15நாட்கள் திருவிழா கோலம் பூண்டு நேற்று சமூர்த்திர தீர்த்த உற்வத்துடன் இனிதே நிறைவுற்றது.
15ஆம் நாள் திருவிழாவினை தம்பிலுவில் மற்றும் தம்பட்டை கிராம மக்கள் வானவேடிக்கைகளுடன் மிக சிறப்பாக நடாத்தினர்.
குறித்த 15 ஆம் நாள் திருவிழாவானது தம்பிலுவில் மற்றும் தம்பட்டை பிரதிநிதிகளான திரு.பு.கணேஷ்சகுமார் மற்றும் திரு.திருநாவுகரசு ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இவ் மஹோட்சவ பூசை நிகழ்வுகள் யாவும் பிரதிஷ்டா பூசணம் சித்தார்ந்த ஞானபாணு, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு. சீதாராம் குருக்கள் (ஆலய பிரதம குரு) இன் நல்லாசியுடனும் தலைமையின் சகல கிரியைகளும் இடம்பெற்று
உற்சவகால பிரதமகுரு: சிவாகம கிரியா தத்துவ மணி, சாதக சிரோன் மணி. சாதக ஞானமாஸ்கரன், ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ சீதாராம கோவர்த்தன குருக்கள் தலையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

