காத்தான்குடி பிரதேச செயலக இணையவழி நேர முன்பதிவு செயலி அங்குரார்ப்பண நிகழ்வு

காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளரை பொதுமக்கள் சந்தித்து தங்களது பிரச்சனைகள் மற்றும் விடயஙகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் நேர  விரயம், வீண் அலைச்சல் என்பவற்றை தவிர்த்து பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான நோக்கமாக கொண்டு இணையவழி நேர முன்பதிவு செயலி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று(11) பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம். எஸ். சில்மியா, நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *