ஓட்டமாவடியில் பல வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் ஓட்டமாவடி பிரதான வீதியில் அரச வாகனங்கள் உட்பட மேலும் பல வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

 

வளி மாசடைதலைத் தடுக்கும் முகமாகவும குழந்தைகளுக்கு மாசு இல்லாத சுத்தமான காற்றையும் தூய்மையான சூழலையும் உறுதி செய்யும் நோக்கோடும் ‘சுவாசிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவோம்’ எனும் தொனிப் பொருளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாடளாவிய ரீதியில் மும்முரமாக வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

 

இதில் அதிக புகையிடும் வாகனங்கள் மற்றும் மேலதிக உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்த வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட வாகனங்களில் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு வளி மாசடைதலை தடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் சாரதிகளுக்கு அதிகாரிகளினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

 

இதன்போது மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மோட்டார் வாகன பரிசோதகர் கே.கே.என்.எம்.குணதிலக தலைமையில் கொழும்பு தலைமையக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (வி.இ.ரி.)தொழில் நுட்ப உதவியாளர் என்.எம்.எம்.மர்சூக் ஏற்பாட்டில் இவ் சோதனை நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

 

இச் சோதனை நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ட்ரைவ் கிரீன் தொழில்நுட்பவியலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *