காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தினால் புனரமைக்கப்பட்ட குளத்தை கையளித்ததுடன் திட்டத்தால் மேற்கொள்ளப்படும் மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்ஹ பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (13) விஜயம் மேற்கொள்ளப்பட்ட அவர் பூநகரியில் அமைந்துள்ள தெளிகரைப்பிரதேசத்தில் காலநிலைக்கு சீரமைவான விவசாய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டத்தால் கொடுக்கப்பட்ட உள்ளீடுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை மற்றும் பூசணி அறுவடை நிகழ்வில் பங்குபற்றியதுடன், 67 மில்லியன் ரூபா நிதியீட்டில் புனரமைக்கப்பட்ட அக்கராயன் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட உப்புவில் குளத்தையும் விவசாயிகளின் பாவனைக்காக கையளித்தார்.
இதில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் சி. பாபு, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

