யாழ் சர்வதேச புத்தகத் திருவிழாவில் ‘புல்வெளி புள்வெளி’ நூல் வெளியீடு

பருத்தித்துறையைச் சேர்ந்த கவிஞர் சு. ஜெயசீலன் எழுதிய ‘புல்வெளி புள்வெளி’ எனும் சூழலியல் கவிதை நூல் 16ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறும் யாழ் சர்வதேச புத்தகத் திருவிழாவில் வெளியிடப்படுகிறது.

சமகால சூழலியல் பிரச்சினைகள், இயற்கைச் சமநிலைக்கு பறவைகள், விலங்குகள் பங்களிக்கும் விதங்கள் மற்றும் ஐ.நா சபையின் 17 வளர்ச்சி இலக்குகளையும் எம் மக்களின் கதைகளையும் கருப்பொருளாகக் கொண்டு கவிதை நூல் அமைந்துள்ளது.

இந் நிகழ்விற்கு புத்தக நேயர்கள், மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் வருகை தருமாறு அழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *